Heavy periods: what is worth recording?
Your experience matters more than guessing a volume of blood.
Sources checked: 2026-10-18 · General education
Notice the effect on your day
Useful clues include frequently soaked products, leaks onto clothes or bedding, needing two products together, large clots or bleeding beyond a week. Record how often you change products and whether you miss work, school or exercise. You do not need to measure the blood to ask for help.
Mention symptoms beyond bleeding
Tell your clinician about unusual tiredness, breathlessness, pain or bleeding between periods. Heavy bleeding can have several causes. Depending on your history, assessment may include blood tests or other investigations. Treatment choices should reflect the cause, your preferences and any pregnancy plans.
அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு: எதைப் பதிவு செய்வது?
ரத்தத்தின் அளவை ஊகிப்பதைவிட உங்கள் அனுபவத்தைச் சொல்வது முக்கியம்.
ஆதாரச் சரிபார்ப்பு: 2026-10-18 · பொதுத் தகவல்
அன்றாட வாழ்க்கையின் பாதிப்பைக் கவனியுங்கள்
பேட் அடிக்கடி முழுவதும் நனைவது, உடை அல்லது படுக்கையில் கசிவு, ஒரே நேரத்தில் இரண்டு பொருட்கள் தேவைப்படுவது, பெரிய ரத்தக்கட்டிகள் அல்லது ஒரு வாரத்திற்கும் மேலான ரத்தப்போக்கு ஆகியவற்றைக் குறியுங்கள். எத்தனை முறை பேட் மாற்றுகிறீர்கள், வேலை அல்லது பள்ளியைத் தவிர்க்கிறீர்களா என்பதையும் எழுதுங்கள். உதவி கேட்க ரத்தத்தை அளக்க வேண்டியதில்லை.
மற்ற அறிகுறிகளையும் சொல்லுங்கள்
சோர்வு, மூச்சுத்திணறல், வலி அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் ரத்தப்போக்கு இருந்தால் தெரிவியுங்கள். காரணத்தைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மதிப்பீடு தேவைப்படலாம். சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் விருப்பங்களும் கர்ப்பத் திட்டமும் முக்கியம்.
These are original educational summaries of the linked sources. They do not replace an individual assessment. A source-check date does not imply personal review by Dr. Sheela.